November 2008
M T W T F S S
« Oct    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Categories

Statistics

FireStats icon Powered by FireStats

Underage Drinking, student violence

சில காலமாகவே பதின்ம வயதுக்குழந்தைகள் குடிப்பழக்கத்திற்கு ஆளாவது குறித்து பேசப்படுகிறது.மேலும் விவரங்கள் இங்கே.
சமீபத்தில் ஒரு பள்ளியின் 8 ஆம் வகுப்புக் குழந்தைகள் பருகும் தண்ணீர் அல்லது கோலா போன்ற பானங்களை எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் சிலவற்றில் மது கலந்திருப்பது தெரியவந்தது. வீட்டில் பெற்றோர்கள் பெரிய பாட்டில்களில் வாட்கா வாங்கி மீதம் வைக்கும் போதோ அல்லது 30 can என்று பியரை வாக்கி மீதம் வைக்கும் போதோ அதில் ஒன்றோ அல்லது ஒரு அவுன்சோ குறையும் போது தெரிவதில்லை. 30மிலி வாட்கா பதின்ம வயதுள்ளவர்களுக்கு உடல்நலத்தை பாதிக்க வல்லது. பெற்றோருக்கும் மற்றோருக்கும் தெரியாமல் மதுவைப் பருக அதை தண்ணீருடன் கலப்பதோ அல்லது கோக் போன்ற திரவங்களில் கலந்தோ எடுத்துச் செல்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் ஒரு வீட்டின் முன் கார்கள் சரியாக நிறுத்தப்படாமல் இருப்பதாலும் அதிக சப்தம் வந்ததாலும் பக்கத்து வீட்டினரின் புகாரின் மேல் காவலர்கள் வர அந்த வீட்டு குழந்தைகள் மது அருந்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.அவர்களை சட்டப்படி குற்றம் செய்ததற்காக காவலர்கள் அழைத்துச்செல்ல, பெற்றோர்கள் மிகுந்த கோபம் கொண்டு நகரின் மீது வழக்கு பதிந்திருக்கிறார்கள். 18 வயதிற்கு மேலானவர்கள் வீட்டில் இல்லாதபோது காவலர்கள் வீட்டினுள் நுழந்ததே அத்துமீறல் என்றும் இந்நிலை நீடித்தால், தனிப்பட்ட உரிமை எல்லாவற்றையும் இழக்க நேரிடும் என்று ஒரு சாராரும், 21 வயதுக்கு கீழே உள்ளவர்கள் குடித்தது சட்டப்படி தவறுதானே, ஏதேனும் ஒன்றுவரம்புமீறி நடந்தால் அப்போதும் காவல்துறைமீதுதான் புகார் வரும் என்று ஒரு சாராரும் வாதிட கடைசியில் வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஒரு நீண்ட வார இறுதிக்கு முன் வசந்த கால விடுமுறைக்கு முன், 10 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனவரும் ஒரு மாணவனின் வீட்டில் 3 மணிஇக்கு குடிக்க அரம்பித்திருக்கிறார்கள். வீட்டில் ஒரு கெக் (Keg)பியர் வாங்கி வைத்திருக்கிறார்கள் பெற்றோர் வார இறுதி பார்ட்டிக்காக. போதை அதிகமாக 3 மாணவர்கள் அந்த குழுவில் இருந்த மனநிலை சரியில்லாத ஒரு மாணவியை வன்புணர்ந்ததோடு மட்டும் அல்லாமல் பேஸ்பால் மட்டையாலும் துன்புறுத்தி இருக்கிறார்கள். பயம் அல்லது போதை தந்த உணர்வு மற்ற யாரும் அதைத்தடுத்து நிறுத்தவில்லை. அடுதத நாள் ஒரு மாணவி தன் கவுன்சிலரிடம் நட்ந்ததை கூற அவர் பள்ளித் தலவர் மூலம் காவலரை அழைக்க வழக்கு பதிவாகி இப்போது அந்த மூன்றூ மாணவர்களும் சிறையில். இன்னமும் வழக்கு முடியவில்லை. இந்த வழக்கில் மது வாங்கி அதை சரியாக காபந்து செய்யாமல் வைத்த பெற்றோர் மீது வழக்குப் பதிய இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் இதை எதிர்க்கிறார்கள். குழந்தைகள் மீது உள்ள நம்பிக்கையால் வீட்டில்வைத்துவிட்டுப் போகீறோம். ஒவ்வொன்ரையும் கண்காணிக்க நேரம் இல்லை, நாங்கள் எப்படி பொறுப்பெடுக்க முடியும் என்பது அவர்கள் காரணம். ஆனாலும் 3 மாண்வர்கள் வாழ்க்கையும் அந்த மாணவியின் உடல்நலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஒருநாள் காலையில் இன்னொரு நகரின் கார்நிறுத்துமிடத்தில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் மது அளவுக்கு மீறியதால் மயங்கிக்கிடந்த இரண்டு பதின்மவயது சிறுமிகள் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டனர். இந்த பிரச்சினை இப்போது மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இதனாலேயே நியுஜெர்சியில் பல நகரங்கள் 21 வயதுக்கு கீழான குழந்தைகள் மது அருந்தினால் அதற்கு பெற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்களுடைய முதல் ஓட்டுனர் உரிமம் காலதாமதப்படுத்தப்படும் என்றும் சட்டமாக்க முயன்று வருகிறோம். போதையில் ஏதேனும் வன்முறைகள் நடந்தால் பெற்றவர்களுக்கும் தண்டனை உண்டு என்பதும் இந்த சட்டத்தின் பகுதி.

பெற்றவர்கள் அரை மனதுடன் மது அருந்துவதை அனுமதிக்கிறார்கள். வெளியே சென்று போதை பழகத்திற்கு உள்ளாகி இறப்பதைக்காட்டிலும் வீட்டிலேயே அருந்துவது தப்பில்லை என்பது அவர்கள் வாதம்.

பெற்றோர்கள் வீட்டில் மது வாங்கி வைத்தால் அவ்வப்போது எவ்வளவு செலவானது, எவ்வளவு மீதம் இருக்கிரது என்பதை சரிபார்ப்பது அவசியம்.

இருப்பும் இல்லாமையும்

திருமணம் முடிந்து இன்றோடு பதினேழு வருடங்கள் கடந்துவிட்டது என்பதுகூட வருடக்கணக்கை கொண்டு மட்டுமே அறியமுடிகிறது. நம் கனவுகளின் நிறங்கள் கூட ஒன்றாக மாறி இருக்கிறது இந்த நீண்ட காலத்தில். சுவாசிக்கும் காற்றைப்போல எனக்கு நீ.
மூச்சுவிடுவதை உணர்கிறபோதே உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பது புரிவது போல, நீ இருக்கும் உணர்வு எனக்கு புரிகிறபோதே அதை இழந்துவிடுவேனோ என்ற ஒரு கவலை அடிக்கோடாக இருப்பது புரிகிறது. இத்தனை நாள் அதை நான் உணர்ந்ததே இல்லை. எப்போது வருவாய் எனக்குறித்து கவலை ஏதும் கொண்டதில்லை, ஆனால் நீ வந்துவிடுவாய் என்ற ஒரு உன்னதமான ஒரு தைரியம் இருந்தது.

வீடு வாங்குவதோ விடுமுறைக்கு போவதோ, வாகனம் வாங்குவதோ என் முடிவில் எனக்கிருந்த நம்பிக்கையைவிட உனக்கு இருந்தது அதிகம்.

இப்போதும் மருத்துவர்களை சந்திப்பது முதல், சிகிச்சை முறைகளை பரீசீலிப்பதுவரை நானே தீர்மானிக்கிறேன். என் மீது நானே நம்பிக்கை இழக்காமல் இருக்கவாவது எனக்கொரு துணைவனாக நீ இருக்க வேண்டும் இன்னும் ஒரு யுகம். சுகமான இந்த பயணத்தில் துணையாக தொடர்வதற்கு என் வந்தனங்கள். குணமாகி வா, வராவிட்டாலும் கூட பாதகம் இல்லை, உன் நினைவுகளே கூட போதுமெனக்கு, ஆனால் ஒருக்காலும் உடல்சக்தியும் உன் கம்பீரமும் இழந்து வாழும் வாழ்வுனக்கு வேண்டாம், அது எனக்கு மிகவும் துன்பத்தை தரும்.

KalHoNaHo

தினம் தினம் போரில் இறக்கும் வீரர்கள், அநியாயமாக இறக்கும் குழந்தைகள், பெண்கள் ஆண்கள் என்பது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டது என்றாலும் நமக்கு தெரிந்த ஒருவரின் பெயரோடினைத்து வரும் போது புரிந்து கொள்ள முடியாத அதிர்ச்சியும் சோகமும் சேர்ந்துகொள்கிறது. அதிலும் இந்த ஒரு வருடமாக நான் பார்த்த மரணங்கள் அனேகம், அதிலும் நண்பர்கள், அவரின் மனைவி அல்லது கணவன், மகனாலேயே சுட்டுக்கொல்லப்பட்ட நண்பர் என்று அனேகர். ஒருவருக்கு மூளை புற்றுநோய் என்றால் இன்னொருவருக்கு நுரையீரல், பிறிதொருவருக்கு கணையம். மரணத்தின் விளைவை புரிந்தும் புரியாமலுமாக இருக்கும் குழந்தைகள் என்பதை பார்க்கும் போது அதுவும் தொடர்ச்சியாக நிறைய இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ளும் போது நமக்கே அந்த மன அழுத்தம் தொற்றிக்கொள்கிறது. நாளும் பார்க்கிற கேட்கிற மரணங்களால் மறத்துப்போன மனசுதான் என்றாலும் கூட தெரிந்தவர்கள் என்னும்போது தடுமாறித்தான் போகிறது.

ரேடியோக்கதிர் சிகிச்சை அளிக்கும் இடத்தில் நிறைய பேர் தங்கள் துணையுடன் காத்திருக்கிறார்கள். யாரும் யாருடனும் பேசுவதும் இல்லை. ஆனால் ஒவ்வொருவராக வர வர அறிமுகம் ஆனதன் அடையாளமாக ஒரு புன்னகை. நிசப்தம், கவலை அப்பிய முகங்கள். உரையாடல் இல்லாமலேயே ஒரு நட்பு தொடங்குகிறது. குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்கள் அதே சீராக தொடர்ந்து சிகிச்சைக்கு செல்ல, யாரேனும் வராவிட்டால் புரிந்துகொள்கிறார்கள் அவர் இறந்து போய் இருக்கக்கூடும் அல்லது உடல் நிலை மோசமாகி இருக்க கூடும். புறத்தோற்றம் மாறிவிட்ட போதும் கூட, அலட்சியமாக கவனிக்காத தொனி இருப்பினும் அந்த physical status பாதுகாக்கவே இத்தனை அவஸ்தைகளும் என்பது ஒரு நகைமுரணாக தோன்றுகிறது.

மரணம் என்பதுகூட ஒரு concept என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஒருவரின் நினைவுகள் இருக்கும் வரை அவருடைய தாக்கம் இருக்கும் வரை அழிவில்லை என்பதும் கூட புரிந்ததுதான். ஆனாலும் ஒரு காலத்தில் இந்த வெப்பமான தொடுகையும், கவலையை, அன்பை, அக்கறையை காட்டும் குரலை கேட்கக்கூட முடியாமல் போகக் கூடுமோ என்ற எண்னம் சில நேரங்களில் ஒருவித சலனத்தை தருகிறது. மரனத்தின் நாழிகை முன்பே தெரிந்தால் மனிதன் இறைவனை மதிப்பானா என்ற வரிகள் கேட்டிருக்கிறேன். இறைவைனை மதிப்பதற்கிருக்கட்டும், துல்லியமாக இல்லாவிட்டாலும் தோராயாமாக தெரிந்தாலே அலைக்கழிக்கிற மனதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

ஆனந்த் திரைப்படத்தில் ராஜேஷ்கன்னா அமிதாபிபிற்கு அறிமுகமாகும் காட்சியில் ஒரு வசனம் வரும். நான் இறப்பது இன்னும் ஆறு மாதத்திற்குள் அதேபோல நீங்கள் இன்னும் ஒரு 60 வருடத்தில் இறப்பீர்கள், ஏன் இத்தனை வருத்தம் என்று. மனம் விசித்திரமானது. நம்மைப்பற்றியே நாம் புரிந்துகொள்ள இன்னும் நிறைய ஆச்சரியங்கள் இருக்கின்றன.