ஊடறு என்னும் தளத்தில் வெளியான என் கட்டுரையின் முதல் பாகம் இங்கே தருகிறேன்.கருத்துக்கள் சில பொருளாதார நிபுணர்களின் கட்டுரைகள் மற்றும் உலக சுகாதார மையம் ஆய்வறிக்கை , வழக்காடுமன்றத்தின் சில முக்கிய குறிப்புகள், மற்றும் நான் கலந்து கொண்ட சில கூட்டங்களின் தொகுப்பே ஆகும். இதில் எந்த ஒரு இனத்தையும் தனியாக குறிப்பது கட்டுரையின் நோக்கம் அல்ல. குழந்தைகளை பார்த்துக்கொள்ள என்று பல்லாயிரக்காண பெண்கள் சட்டத்தின் அனுமதியுடன் முறையாக கடவு சீட்டு பெற்றோ அல்லாமலோ அமெரிக்கா வந்து கொண்டிருக்கின்றனர். இங்கே கடவு சீட்டு (VISA) இல்லாமல் வரும் பெண்கள் ஏதேனும் ஒருவரை சார்ந்திருப்பதால், சட்டமுறைப்படி அல்லாமல் பணமாக ஊதியம் பெற்று கொள்வதால் மிக குறைந்த ஊதியமே பெறுகின்றனர். ஏதேனும் பாலியல் கொடுமைகள் நடந்தால்கூட புகார் செய்ய பயந்து வாழ்கின்றனர். இதனால் பலவித வன்முறைகளுக்கு ஆளாவதை அரசாங்கம் உணர்ந்திருக்கிறது. சமீபத்தில் ஆந்திராவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல சிறுமிகள் பாலியல் ரீதியாகவும், உடல் வன்முறையாலும், சரியான உணவின்றி கொடுமை படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது.ஆந்திரா பற்றிய வழக்கு மிக பெரிய அளவில் கவனத்தை கவர்ந்ததும், பெண்கள் ஒரு ஆங்கில தன்னார்வ தொண்டரால் விடுவிக்கப்பட்டதும் சமீபத்தில் நிகழ்ந்தவை என்பதலேயே குறிப்பிடப்படுகின்றன.வழக்கு இன்னமௌம் முடியவில்லை என்பதால் மேற்கொண்டு விவரங்கள் தர இயலவில்லை.
உலகமயமாக்கப்பட்ட வேலைக்காரர்கள் பற்றி தன்னுடைய நூலில் பாரீனாஸ் இதை மிக அழகாக எழுதுகின்றார். இவர் கலிபோர்னியா பல்கலை கழகத்தின் வேலைபார்க்கும் குடும்பங்களின் மன்றத்தில் அங்கத்தினராக உள்ளார். பிலிப்பைன்ஸில் தன் குழந்தைகளைபார்த்துக்கொள்ள $40 வாரம் ஊதியமாக கொடுக்கும் பெண், “இதில் பணம் அதிகம் கிடைக்கிறது, ஆனால் அதற்கேற்றார்போல வேலையும் மிக அதிகம். துணிகளை இஸ்திரி போட்டு கொண்டிருக்கும் போதே அடுக்களையிலிருந்து தட்டுக்களை கழுவ அழைப்பு வரும். என் குழந்தைகளை பிரிந்து இருக்கும் எனக்கு, இந்த குழந்தைகளிடம் அன்பு செலுத்துவது ஒன்றே ஆறுதல்” என்று கூறுகிறார்.
இவரைப் போன்றவர்கள் இந்த உலகமயமாக்கப்பட்ட கவனிப்பு சங்கிலியில் ஒரு அங்கம்தான். மூன்றாம் தர நாடுகளின் ஏழையின் வீட்டில் பிறந்த குழந்தைகளை அங்கே உள்ள மூத்த பெண் பார்த்துக்கொள்வாள். அவளுடைய அம்மா இன்னொரு வீட்டில் அங்கேயிருந்து சற்று மேம்பட்ட நாட்டிற்கு சென்ற பெண்ணுடைய குழந்தையை பார்த்துக்கொள்வாள் . இது இரண்டாம் சந்திப்பு. மேம்பட்ட நாட்டிலிருந்து இன்னும் அதிக வளர்ச்சியடைந்த நாட்டிற்கு சென்ற பெண் அங்கே பணக்கார வீட்டில் உள்ள பெண்ணை பார்த்துக்கொள்வாள். இது கடைசி சந்திப்பு (last link). உலகளாவிய சங்கிலி ஒரு ஏழை நாட்டில் தொடங்கி பணக்கார நாட்டில் முடியும். இல்லை எனில் ஒரு ஏழை குடும்பத்திலிருந்து அந்த நாட்டில் உள்ள சற்றே பணக்கார குடும்பத்தில் முடியும்.
இத்தகைய உலகளாவிய குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் செவிலிகள் அல்லது தாதிகள் சங்கிலி 1994 இலிருந்து அதிகரித்திருக்கிறது. 120 மில்லியன் பெண்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு குழந்தைகளை பார்த்துக்கொள்ள சட்டமுறைப்படியோ அல்லது சட்டமுறைப்படி அல்லாமலோ குடி பெயர்ந்திருக்கிறார்கள். இது உலகின் 2% மக்கள் தொகையாகும் என உலக சுகாதார மையம் கூறுகிறது. இதில் தங்களின் செல்ல குழந்தைகளை விட்டு விட்டு அடுத்தவரின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள எத்தனை பேர் சென்றார்கள் என்பது சரியாக தெரியாத போதிலும் இவ்வாறு சென்றவர்களில் பெரும்பாலும் பெண்கள் என்பது தெரியவருகின்றது. தற்போது தங்கள் குழந்தைகளை விட்டு வரும் பெண்களில் பலர் பலவித மனநல நோய்களுக்கும் உள்ளாவதாக கூறுகிறார்கள்.
பெண்களின் நிலை வளர்ச்சி இவற்றிற்கும் ஒரு நாட்டில் உலக வங்கியில் உள்ள கடனின் நிலைக்கும், மற்றும் உணவின் தட்டுப்பாடு ஆகியவற்றிற்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. சமீபத்தில் ஆய்வாளர்கள் அவிலா, எவிலின் க்லென், மேரி ரோமெரோ போன்றவர்களின் முயற்சியால் சில புதிர்கள் அவிழ தொடங்கி உள்ளன.
இவற்றை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல் என்ன என்றால் பொருளாதர முடிவும், மனித மனத்தின் தன்மையும் மிகவும் வேறானவை. மனித உணர்வுகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறுவதை எப்படி கண்காணிக்க முடியும்?
சிக்மண்ட் ப்ராய்டின் கொள்கைப்படி இது முடிகின்ற காரியமே. உதாரணமாக ஒருவர் திரு சந்திரனை காதலிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் இல்லாத போது அந்த அன்பு அவருடைய குழந்தையிடம் செலுத்தப்படும் என்று பிராய்ட் நம்புகிறார்.பெரும்பாலும் மிக நெருங்கிய சொந்தங்களிடையே இது நடக்கும் என்று ப்ராய்ட் நம்பினாலும், சில சமயங்களில் நண்பரின் நண்பன் நண்பனாவது நடைமுறையில் சாத்தியமே.
இது உண்மையானால் இங்கே அன்னையின் அன்பே ஒருவித இடமாற்றம் அடைகிறது. விக்கியின் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அன்பு, பணக்கார பெண்ணின் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. இப்படி அன்பு இடமாற்றம் செய்ய முடியும் எனில் இது எப்போதும் பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளவர்களை நோக்கியே நகர்கிறது. எனில் அன்பில்கூட பாகுபாடு தோன்றுகிறது.
அது உண்மையெனில் ஏழைகளிடமிருந்து சுரண்டப்படும் அன்பு பொருளாதரத்தில் மேம்பட்டுள்ளவர்களை அடைகிறதா?
இது மேலும் மேலும் வளர்வதை பார்க்கும் போது அமெரிக்கா போன்ற மேம்பட்ட நாடுகள் தாதுப்பொருட்கள் மட்டும் அல்லாது அ ன்பையும் கீழை நாட்டிலிருந்து பெற்றுக்கொள்கின்றனவா என்ற கேள்வி எழாமல் இல்லை. விக்கி போன்றவர்கள் பொருளாதார நிர்ப்பந்தத்தால் இது போல நாடுவிட்டு நாடு மாறும் போது அவர்களை அறியாமல் ஏற்ற தாழ்வுகளை கொண்டுவருகிறார்கள். ஆனால் இந்த சங்கிலியில் உள்ளவர் அனைவருமே அவரவரை பொறுத்தமட்டில் தங்களுக்கு சரி யென்று தோன்றியதையே செய்து வருகிறார்கள்.
ஆனாலும் இவர்களால் தங்கள் குழந்தைகளை பிரிந்து நிம்மதியாக வாழமுடிவதில்லை. பிலிப்பனஸுக்கு சமீபத்தில் சென்ற நானி ஒருவர் தங்கள் குழந்தைகள் தன்னை அடையாளம் காணவில்லை என்றும் அவர்கள் வாழ்வில் பெருமளவை தான் இழந்துவிட்டதாகவும் வருத்தப்படுகிறார். ஒரு நானி தன் குழந்தையை 4 வயதில் விட்டு விட்டு வந்ததாகவும் இப்போது அந்த குழந்தைக்கு 10 வயது ஆன பொதும் தன்னை கட்டிகொண்டு விடவேயில்லை என்றும் மீண்டும் விட்டு விடப்போகிறேனோ என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும் சொல்லி கண்கலங்குகிறார்.
இன்னும் சிலர் அன்பு இடமாற்றம் முழுதுமாக செய்ய முடிவதில்லை எனவும் புதிதாக தன் குழந்தைகளை விட்டு வந்த போது அந்த நினைப்பில் பல மணிநேரம் கூட வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்ததாகவும், வேலைகளை சரிவர செய்யாததனால் கோபத்திற்கு இலக்காணதாகவும் சொல்லி இருக்கிறார். இரண்டு மாத குழந்தையை விட்டு விட்டு வந்த இளம் தாய் இரவு பகல் பாராது அழுதிருக்கிறார். சந்தோஷமில்லா இவர்களிடம் குழந்தைகளை விட்டு செல்பவருக்கும் தனித்திருக்கும் குழந்தைகளாலும் இந்த சமுதாயத்திற்கு ஏற்படும் விளைவுகள் என்ன? குழந்தைகளை பார்த்துக்கொள்ள வந்தவர்களில் 50% பெண்கள் கல்லூரி படிப்பை படித்தவர்கள். தங்கள் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டத்தினாலும் பொருளாதார கஷ்டங்களினாலும் இவ்வாறு பெண்கள் மேலும் மேலும் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madekarthikramas wrote:
பத்மா அது ஊடறு என்று நினைக்கிறேன்.
reply to this comment
01/08 15:29:20
Padma Arvind wrote:
நன்றி கார்த்திக். திருத்தி விட்டேன்.
reply to this comment
01/08 15:36:52
Thangamani wrote:
//இது மேலும் மேலும் வளர்வதை பார்க்கும் போது அமெரிக்கா போன்ற மேம்பட்ட நாடுகள் தாதுப்பொருட்கள் மட்டும் அல்லாது அ ன்பையும் கீழை நாட்டிலிருந்து பெற்றுக்கொள்கின்றனவா என்ற கேள்வி எழாமல் இல்லை. //
//குழந்தைகளை பார்த்துக்கொள்ள வந்தவர்களில் 50% பெண்கள் கல்லூரி படிப்பை படித்தவர்கள்.//
ஆச்சர்யப்படுத்தும் தகவல்கள்! நன்றி!
reply to this comment
01/08 21:43:16
ராம்கி wrote:
நன்று. நன்றி. மறுமொழி நாளை..
reply to this comment
01/08 22:05:03
padma wrote:
தங்கமணி, ராம்கி
நன்றிகள் பல. இதை இன்றும் தொடர்ந்திருக்கிறேன்
reply to this comment