போரில் மேலும் பொருள் விரயம் ஆவதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஒதுக்கீடு செய்யும் நிதியை குறைக்க புஷ் பேச்சுவார்த்தை நடத்துவதாக கடந்த மாதத்தில் நடந்த கூட்டத்தில் பேச கேட்டேன். இந்த நிதியால் பலனடையும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் ஏராளம். இதிப்பற்றி மேலும் விவரங்கள் தேடியபோது கிடைத்த தகவல்களை ஊடறுக்கு எழுதி அனுப்பி இருந்தேன். அது இங்கே: போர் , மலேரியா, புற்று நோய் இவற்றை விட 15-44 வயதிற்குள் உள்ள பெண்கள் அதிகமாக இறப்பதற்கும் உடல் ஊனமுறுவதற்கும் காரணம் அவர்களுக்கு ஆண்கள் இழைக்கும் கொடுமைகள்தான். 5 இல் ஒரு பெண் தங்கள் வாழ்நாளுக்குள் ஒருமுறையேனும் அவருக்கு நெருங்கிய ஆணால் வன்முறைக்கு உட் படுகிறாள். இதில் பெண்களை அதிகம் கொடுமைக்குள்ளாக்குவது அ வர்களுடைய தந்தை, கணவன் சகோதரன் என்று நெருங்கிய உறவினர்களே.
உலக அளவில் பெண்கள் 2/3 பங்கு ஊதியம் பெறாத நிலையில் இருக்கிறார்கள். ஏழை நாடுகளில் பெண்கள் நாளைய சமுதாயத்தை உருவாக்குகிறார்கள். சில ஆப்பிரிக்க நாடுகளில் பெண்கள்தான் விவசாயம் கவனிக்கிறார்கள்.
பாலியல் வன்முறைகள் மறைமுகமாக பொருளாதாரத்திற்கு விளைக்கும் கேடுகள் அதிகம். ஏழை நாடுகளில் அதிக உறபத்தி தரும் விவசாயம் போன்ற தொழில்கள், துணிகள் தைப்பது போன்ற அடிப்படையான தொழில்களை செய்பவர்கள் பெண்களே எனும் போது அவர்கள் உடல் மற்றும் மன நலன் பாதிக்கப்பட்டால் உற்பத்தியும் குறைகிறது. மதிப்பு போட்டால் கிட்டதட்ட ஆண்டொன்றுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான உழைப்பு பெண்களுடையது.ஆனால் இவர்களை உடல் ஊனமாக்கும் வரை நடத்தப்படும் வீட்டு வன்முறையை பற்றி யாரும் பெருமளவில் வருத்தப்படுவதில்லை. இங்கிலாந்து நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு 10 இல் 1 பெண் கணவன் அல்லது தன் நண்பர்களால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள். இப்படிப்பட்ட வீட்டு வன்முறையால் மருத்துவ செலவு ஆண்டொன்றிற்கு இங்கிலாந்து நாட்டிற்கு 1 பில்லியன் பவுண்டு செலவாகிறது.
வன்முறையால் இனப்பெருக்கமும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. வீட்டில் நடக்கும் வன்முறை, பாலியல் கொடுமைகள் இவை இனப்பெருக்கம், பாலியல் உறவில் நேர்மை, மற்றும் கருத்தரித்தல், பிள்ளை வளர்த்தல் ஆகியவற்றுடன் பிண்ணிப்பிணைந்துள்ளது.
அதேபோல பதின்ம வயதில் கருத்தரித்தல், பாலியல் உடல் நலக்குரைவு இவையாவும் அடிப்படையில் பாலியல் வன்முறைகள் மற்றும் பாதுகாப்பில்லாத உறவுகள் பயமுறுத்தல்கள் ஆகியவற்றால் வருவதும் உளவியல் நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் குறைபிரசவங்கள், உடல் ஊனத்துடன் குழந்தைகள் பிறத்தல், பதின்ம வயதினருக்கு AIDS போன்ற நோய்கள் வருதல் இவையாவும் அடிப்படையில் வீட்டில் நடக்கும் வன்முறைகளாலேயே வருகின்றன.
அமெரிக்காவில் ஒவ்வொரு 15 வினாடிகளில் (seconds) ஒரு பெண் கணவனால் அடிக்க படுகிறாள். ஒவ்வொரு வருடமும் லண்டனில் 10இல் ஒரு பெண் கணவனால் அடிக்கபடுகிறாள் ( மருத்துவ மனைக்கு வரும் அளவுக்கு அடிப்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது).
கருத்தரித்தபின் இந்த வன்முறைகள் அதிகரிக்கின்றன. பெரும்பாலான சமயங்களில் குறைபிரசவங்களுக்கு இந்த வன்முறையே காரணமாக இருக்கிறது.
கனடா, இஸ்ரேல், பிரேசில் போன்ற நாடுகளில் பெண்கள் பெரும்பாலான சமயங்களில் முன்பின் தெரியாதவனைவிட க ணவனால் கொலை செய்யப்படுவது அதிகம்.
ஆசிய நாடுகளில் கருவிலேயே அழிப்பது, பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்ததும் கொலை செய்வது இவற்றால் 60 மில்லியனுக்கும் அதிகமான வர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள்.
பாலியல் வன்புணர்வு பற்றிய கருத்துக்கணிப்பில் அமெரிக்காவில் உள்ள 20% பெண்கள் தங்கள் வாழ்நளில் ஒருமுறையாவது வன்புணர்வை உணர்ந்திருக்கிறார்கள்.இத்தகைய கருத்து கணிப்பில் பங்கு கொள்ளும் உரிமை கீழைநாட்டு பெண்களுக்கு அவர்களது கணவனால் மறுக்கப்படுகிறது.
இவ்வாறு வன்புணரப்பட்ட பெண்கள் பாலியல் நோய்,AIDS போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் மட்டும் 4% பெண்கள் இவ்வாறு வன்புணர்தலால் இத்தகைய நோய்களில் திண்டாடுகிறார்கள்.
கருவைக்கலைப்பது சட்டப்படி முறையாகாத இடங்களில், வசதி இல்லாத வீடுகளில் மருத்துவர் துணையில்லாமல் செய்வதால் அதிக வலி, மற்றும் அவை சீழ்பிடிப்பது போன்ற நிலையாலும் உடனே வீட்டு வேலைகள் செய்வதாலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.சமீபத்தில் வன்புணரப்பட்ட பெண் அன்றே வீட்டு வேலைகள் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையை நேரில் கண்டேன். ஓய்வெடுக்க கூட அனுமதி இல்லை.
இப்படிப்பட்ட அதிக இரத்த போக்கு, சீழ்பிடித்தல் இவற்றால் 75000 பெண்கள் ஆண்டொன்றுக்கு இறக்கிறார்கள்.
கோடிக்கணக்கில் குழந்தைகளும் சிறுமிகளும் விற்கப்படுவதும், பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதும், இன்னும் அடிமைகளாக்கப்படுவதும் உலகெங்கும் வருடந்தோறும் நடக்கிறது.
1998 இல் நடந்த ஐக்கிய நாடுகள் கூட்டதில் பெண்களுக்கு எதிரான வன்முறையே வளர்ந்துவரும் அபாயமாக முதல் இடத்தில் குறிப்பிடப்பட்டது. இந்நிலை மாறாவிடில் இது உலக மக்கள் அனைவருக்கும் ஊறு விளைவிக்க கூடியது என்றும் அறிவிக்கப்பட்டது.
உலக உஅடல் நல அமைப்பு உலகில் ஐந்தில் ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் தந்தையால், சகோதரர்களால், கணவனால் உடல் அல்லது பாலியல் சம்பந்தமான வன்முறைகளுக்கு ஆளாவதாக கூறுகிறது.
ஒரு பெண்ணின் இனப்பெருக்க உடல் நலன் , அவளுக்கு கருவுறுவாவதை நிர்ணயிக்க கூடிய உரிமை, ஆகியவை அவளுடைய குடும்பத்தை சார்ந்தே உள்ளதால் அதிக பட்சம் வன்முறைக்கு ஆளாக வழிவகுக்கிறது. இது நேர் அல்லது மறைமுகமாக கீழ்க்கண்ட சில பிரச்சினைகளுக்கு அடிகோலுகிறது.
• வன்புணர்தலால் உருவாகும் விருப்பம் இல்லாத தாய்மை
• கருத்தடை சாதனங்களை உபயோகிக்க அனுமதி மறுப்பு
• கருத்தரிக்கும் காலத்தில் வரும் உடல்நல சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகள் (complications)
• பாலியல் நோய்கள்
• இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான உபாதைகள்
• மன நல பாதிப்புக்கள்
பெண்கள் பிறக்கும் முன்பே வன்முறை ஆரம்பித்து விடுகிறது. கோரியாவில், இந்தியாவில் ஆண்குழந்தை வேண்டும் என்பதால் பெண்கள் அதிக அளவு மன அழுத்தம் அடைகிறார்கள். இதனால் மருத்துவ பரிசோதனைகள் செய்து, தேவையில்லா குழந்தைகளை அழித்து விடுகிறார்கள். சில சமயம் முன்பே கூறியபடி தக்க சிகிச்சைமுறை இன்றி செய்ப்படும் இவற்றால் அதிக அளவு உடல் உபாதைகள் வாழ்நாள் பூராவும் அனுபவிக்கிறார்கள்.
சீனாவில் உள்ள ஒரு குழந்தை அரசு திட்டத்தால், பிறக்கும் அந்த ஒரு குழந்தையும் ஆணாக இருக்க வேண்டும் என்று அதிக கருக்கலைப்பும் ஆரம்பமாகியுள்ளது. சில சமயங்களில் கருவை கலைக்க முடியாமல் போனால், தாதிகள் சூடான நீரில் பிறந்த பெண் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்கிறார்கள்.
இந்தியாவில் வாயில் நெல் மணியை அடைத்து, அல்லது ஈரத்துணியில் குழந்தையை சுற்றி மூச்சடைத்து இறக்கடிக்கிறார்கள்.
கோடிக்கணக்கான பெண்குழந்தைகளுக்கு தங்கள் பிறப்பு உறுப்பில் ஊனம் செய்யும் அறுவை சிகிச்சையை (Genetic mutilation) வீட்டிலேயே, மயக்க மருந்தும் இல்லாமல் செய்து கொடுமைபடுத்துகிறார்கள். இதனால்பெண் உறவு கொள்லும் போது வலி ஏற்படும் என்பதும் மற்ற ஆண்களுடன் உறவு கொள்ள மாட்டார்கள் என்பதும் நம்பிக்கை.
இந்தியாவில் வருடத்திற்கு 10000 பெண்குழந்தைகள் விற்கப்படுவதால் பாலியல் தொழிலுக்கு பருவம் வரும் முன்னரே அனுப்பப்படுகிறார்கள். பாகிஸ்தானில் வன்புணர்வை காவ லரிடம் புகாரிடும் பெண் அந்த குற்றத்தை நிருபிக்காவிட்டால் வாழ்நாள் முழுதும் சிறையில் அடைக்கப்படுகிறாள் அல்லது கல்லால் அடித்து கொலை செய்யப்படுகிறாள். ஆப்பிரிக்காவில் கணவன் ஆவியை பரிசுத்தம் செய்ய கணவன் இறந்த அன்றே அவனது மனைவி ஊரார் தேர்ந்தெடுத்த ஒருவனுடன் உறவு கொள்ளுமாறு வற்புறுத்தப்படுகிறாள். இல்லை எனில் ஊருக்கே சாபம் வரும் என்று பயமுறுத்தல் செய்கிறார்கள்.இதனால் பரவும் தொற்றுநோய்கள் அதிகம். சமீபத்தில் இந்தியாவில் ஒரு மேல்சாதி ஆண்மகனை காதலித்தாள் என்பதற்காக ஒரு பெண்ணை 10 மேல்சாதி ஆண்கள் வன்புணருமாறு பஞ்சாயத்து தீர்ப்பளித்ததும் அது மனித உரிமை குழுவுக்கு சென்று விவாதிக்கப்பட்டதும் தெரியும்.
இந்நிலை மாறவேண்டுமானால் வன்முறை பற்றி முதலில் அறிதலும், அதை எதிர்ப்பதும் அவசியம்.
பெண்களின் உரிமையை மனித உரிமை குழுவில் ஏற்று உலக அளவில் உதவிகள் செய்யவும், சமுதாய அளவில் விழிப்புணர்வும் ஏற்படுத்துதல் வேண்டும்.
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeThangamani wrote:
நல்ல தொகுப்பு பத்மா. பெண்களுக்கான வன்கொடுமைச் சட்டம் வரும் நேரத்தில் இதை எழுதியிருப்பது பொருத்தமானது. இந்தியாவில் சட்டங்கள் எவ்வளவு தூரம் பயனுள்ளவைகள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். சட்டரீதியான பாதுகாப்பு இருப்பது மிக அவசியம். அது மறைமுகமாக பெண்களுக்கு ஒரு தைரியத்தை தருவதுடன் குடும்பமே பெண்களுக்கான முதலும் முடிவுமான புகலிடம், பாதுகாப்பு போன்ற பொய்களை அம்பலப்படுத்தும். குடும்பம் என்ற நிறுவனமும் மற்றைய எந்த நிறுவனங்களைப் போலவே கண்காணிப்புக்கும், பரிசீலனைக்கும், தேர்வுக்கும், வசதிக்கும் உண்டான அமைப்பு என்பதும் பெண்கள்/ஆண்கள் மனதில் பதிய வகை செய்யலாம்.
reply to this comment
25/08 08:35:54
கரிகாலன் wrote:
என்னதான் சட்டங்கள் போட்டாலும் சட்டங்களின் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.முதலில் ஆண்களின்
மனதில் இதைப்பற்றிய விழிப்புணர்வைக்
கொண்டு வரவேண்டும்.இதன் மூலம் தான்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக்
குறைக்கலாம்.