மிஸிசிப்பி பர்னிங் என்ற திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு ஓரளவுக்கேனும் அமெரிக்காவில் இருந்த தீண்டாமை பற்றி புரியும். ஒரே உணவகத்தில் உணவு உன்ண முடியாது, அதேபோல ஒரே இடத்தில் நீர் அருந்த முடியாது என பல கட்டுப்பாடுகள். இவற்றை தாண்டி இவர்கள் யோசிக்க வைத்து மாற்றத்தை ஏற்படுத்தியதில் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு பெரிய பொறுப்பு உண்டு.
அடிமைகளாக புகைவண்டி பாதைகள் அமைக்க வந்த சீனர்களும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் முன்னேற முடிந்ததற்கு இங்கே ஏற்பட்ட மறுமலர்ச்சியும் காரணம். அமெரிக்கா முதலாளித்துவ நாடு, இங்கே பொதுநலம் முதல் அனைத்தும் நுகர்வோரை கவரவும், குறைந்த செலவில் திறமையுடன் செய்வது என்ற ஒரு சித்தாந்தத்தைஒட்டி இருக்கும். இதோ இந்தியர்கள் இன்னபிற மக்கள் வயதாகிவிட்டால் அவர்களை எப்படி பாதுகாப்பது அவரவர் தேவைக்கேற்ற, கலாசாரத்திற்கேற்ற மாதிரி முதியோர் இல்லங்கள் கட்டலாமா என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டது. மக்கள் தொகை குறைவு எனவே அதிக வேலை, குறைந்த மக்கள் என்பதால் இங்கே வேலைக்கான கூலி மிக அதிகம். இதை மாற்றவும் எளிய முரையில் குறைந்த நேரத்தில் செய்ய என எல்லாமே கருவி மயமமாக்க, அரசாங்கம் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.
60 வருடங்களுக்கு முன்னால் காற்று போகும் குழாய் உடைய கழிவறைதான் இங்கே. நிறைய கிராமங்களில் மின்சாரம் இருந்திருக்கவில்லை, அதேபோல நிறைய வயதான் காரியதரிசிகள் தங்கள் இளமைக்காலத்தில் கழிவறை இல்லாமல் கஷ்டப்பட்டதை, துணிதுவைத்து அதை எப்படி காய வைத்தார்கள் என்றெல்லாம் சொல்ல கேட்டிருகிறேன். இப்போது செப்டிக் குளம் உள்ள கழிவறைகள் கூட அவ்வளவாக இல்லை. சில 30 வருடத்திற்கு முன் கட்டிய வீடுகளில் மட்டுமே இருக்கிறது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை அதை சுத்தம் செய்வதும், பூமிக்கு கீழே உள்ள குழாய் மூலம் கழிவுப்பொருட்களை அகற்றுவதும், மாதம் ஒருமுறை அந்த குழாய்களை சுத்தம் செய்வதும் இதற்காக சுகாதாரத்தில் நற்சான்றிதழ் பெற்ற சுகாதார காவலர்களே.
வீட்டில் கழிவை அகற்ற மாதம் நகரசபைக்கு கட்டும் பணத்தில் ஒஉ குறிப்பிட்ட சதவிகிதம் மேலும் புது குழாய்கள் போட, இன்னொரு சதவிகிதம் இருக்கும் குழாய்களை பழுதுபார்க்க, மற்றும் ஒன்று பொதுநலத்திற்காகவும் இந்த சுகாதார காவலர்களின் நற்சான்றிதழை ஆண்டு தோறும் புதுப்பிக்க மேலும் புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள எனவும் செலவாகிறது.
ஆசியா ஆ ப்பிரிக்கா போன்ற கண்டங்களில் உள்ள முக்கிய நகரங்களில் 1 மில்லியன் மக்கள் தொகை அதிகமாக உள்ள நகரங்களில் கூட நல்ல கழிவு அகற்றும் திட்டம் இல்லை.அதேபோல 1996 வரைக்கும் கிட்டதட்ட 220 மில்லியன் மக்களுக்கு நல்ல சுத்தமான குடிநீர் இல்லை.உலகில் 2.4 பில்லியன் மக்கள் கழிப்பறை வசதி இன்றியும், 2.4 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் நீரினால் பரவும் வயிற்றுபோக்கினால் இறக்கிறார்கள் என்பதும் வருத்தமான செய்தி.
ஆசியாவில் 53% குறைவான மக்களுக்கே கழிப்பறை வசதிகள் உண்டு. இதில் கிட்டதட்ட 50% நவீன கழிப்பறையும் மற்ற 25% மனிதர்கள் வந்து மலம் எடுத்து சுத்தம் செய்யும் வகையிலும், இன்னும் 12% காற்று மூலம் அசுத்த காற்று நீங்கும் வசதி உடையது என்றும், மற்றைய 12% வெளியிடங்களில் ஒரு சுவர் மட்டுமே உள்ள இடமாகவும் உள்ளன.
சபர்மதி, மீரட் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் நீண்ட தொலைவு சென்று மறைவிடங்களை தேடவேண்டியிருக்கிறது என்றும், இதில் பெண்கள் மிக தொல்லை அனுபவப்பதும் இதற்காகவே அவர்கள் இருட்டும் நேரத்தில் செல்வதும், அப்போது பாலியல் தொல்லைகளுக்கு உள்லாவதும் உலக சுகாதார மையத்தையும், மனித உரிமைகள் நிறுவனத்தையும் யோசிக்க வைத்திருக்கிறது.
நான் சிறுமியாக இருந்த போது அப்பா தபால்நிலையம் தரும் வீட்டில் இருந்தவரை நவீன கழிவறையுடன் கூடிய வீட்டில் இருந்தோம். அதன்பின் வாடகைக்கு வீடு எடுத்து இருக்கும் போது நவீன கழிப்பறைகள் இல்லாத இடத்தில்தான் இருந்தோம். எங்களால் அங்கே 6 மாதம் கூட இருக்க முடியவில்லை. நாற்றமும் சுகாதார குறைவும் பாதிக்க தொலைவில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்தாலும் பரவாயில்லை, நல்ல கழிவறையுடன் கூடிய வீடே வேண்டும் என்று தேடி இடம் பெயர்ந்துவிட்டோம். இதையே தினமும் தொழிலாக செய்பவர் மனநிலை எப்படி இருக்கும்? இதற்காக நான் என்ன செய்கிறேன் என்பது தொடரின் கடைசியில் எழுத இருக்கிறேன்.
இந்தியா நாறுகிறது என்ற புத்தக அறிமுகத்தின் இரண்டாம் பதிவில் வெங்கட் இதைப்பற்றிய தனது தீர்வுகளை எழுதி இருக்கிறார். ரோசா வசந்தும் இந்த நூலை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அமெரிக்காவில் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஏதேனும் குற்றம் இழைத்தால் பூங்காக்களை சுத்தம் செய்வது, பொது கழிப்பிடங்களை சுத்தம் செய்வது போன்ற தண்டனைகளும் தரப்படுவதால் பொதுமக்களும் இதை பற்றிய புரிதல் உள்ள வர்களாக இருக்கிறார்கள். எந்த ஒருதிட்டமானாலும் ஒரு பகுதி மக்களுக்கு அதை எடுத்து சொல்ல (outreach)செலவழிக்கப்படுகிறது.
நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்களோ அங்கே உள்ள பள்ளியில் இலவசமாக படிக்க முடிகிறது. புத்தகங்கள், வாத்திய இசை குழுவில் இருந்தால் அதற்கான இசைக்கருவிகள் அனைத்தும் இலவசமாக தரப்படுகிறது. தெரு முனையில் இருந்து அழைத்து செல்லும் பேருந்து முதல் அனைத்தும் இலவசம். நீங்கள் பேருந்தை உபயோகிக்கவில்லை என்றால், குழந்தைகளை நீங்களே பள்ளியில் கொண்டுவிட்டால், ஆண்டுக்கு $400 உங்களுக்கு திருப்பி கிடைக்கும் (NJ யில்). இவையும் நாம் கட்டுகிற பள்ளி மாநில வரியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டே செலவு செய்யப்படுகிறது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் வாரம் உணவிற்காக food stamp, மற்றும் பணம் வழங்கப்படுகிறது. இதற்காக ஏழைகள் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள், குழந்தைக்கான பணத்தை தவறாக செலவு செய்கிறார்கள் என்ற குற்றசாட்டெல்லாம் எழாமல் இல்லை. இதனால் பள்ளிக்கு அனுப்புவது, தொழில் நுட்ப கல்வி கற்பதற்கு குழந்தைகளை அனுப்ப வறுமையில் வாடும்பெற்றோருக்கும் தடை இல்லை.நம் ஊரைப்போல குழந்தையின் வருவாய் நின்றுவிடும் என்ற கவலை இல்லை. சில ஏழைகளின் வீடுகளில் குழந்தைகளும் வேலைக்கு போவது இந்த வருமானத்தால்தான்.
பள்ளி வரிப்பணத்தை எப்படி செலவு செய்வது முதல் அதை சாதாரண மக்களும் அறிந்துகொள்ளும் படி எல்லா விவரங்களும் நீங்கள் இணைய தளத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியும், அல்லது மாநகராட்ச்சியை அழைத்து கேட்டால் (right to know) விதிப்படி அனைத்து தகவலும் உடனே அனுப்பிவைக்கப்படுகிறது.
இங்கே மதங்களின் ஆளுமை நடுத்தரவயதுக்காரர்களிடம் உள்ளதுபோல இளைய தலைமுறையிடம் இல்லை. : These kids don’t go to church on Sunday” என்று வருத்தப்படும் பெற்றோர் உண்டு. மதங்கள் கருக்கலைப்பு, ஓரின திருமணம் போன்றவற்றில் தங்கள் கருத்தை சொல்லி எதிர்ப்பதுபோல தொழில் விஷயங்களில் தலையிடுவது இல்லை. நிறைய கூட்டங்களில் இவற்றின் பிரதிநிதியாக ஒருவரை அழைப்பதுண்டு இந்து கோவில்கள் முதற்கொண்டு. திட்டத்தின் ஆரம்பத்திலேயே அவர்களை சேர்த்துக்கொள்வதால் திட்டத்தை செயலாக்கும்போது அதன் மீதான எதிர்ப்புகள் குறைவு.
தொடரும்:)