தீண்டாமை கொடுமை என்றால் இதில் எல்லா மதங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமையாக இவர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் பிறவிகள் உண்டு. அது பெண்கள் தான். இதில் இன நிற வேறுபாடு இல்லை. ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாகவும் அதிலும் ஏழையாகவும் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டும்.
இதில் எந்த மதமானாலும் வேறுபாடில்லை. இந்த நிறுவனங்கள் அனைத்தும் நிறுவப்பட்டதும் அதன் கொள்கைகள் வரையறை செய்யப்பட்டதும் ஆண்களால்தானே. இறைநம்பிக்கை இல்லாத பலருக்குகூட இந்த நீதியில் உடன்பாடு இருக்கிறது.
யூதர்கள் இனம் பெண்கள் மாதத்தில் ஒருவாரம் மட்டுமே புனிதமானவர்கள் எனறு சொல்கிறது.மாத விலக்கு இருக்கும் ஒருவாரம், அதற்கு முன்னும் பின்னும் இரண்டு வாரங்கள் தூய்மை இல்லாதவாரம் என்பதால் எந்த நிகழ்ச்சியிலும் அனுமதிக்கப்படுவதில்லை. சிறுவர்கள் 13 வயதில் ஆடவர்களாக அங்கீகரிக்கப்படும் பார்மிட்ஸுவா என்னும் புனித நிகழ்ச்சியில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. இப்போது சில மேலை நாட்டு நாகரீகம் பாதிக்கப்பட்டவர்கள் (!) பாட்மிட்ஸுவா என்று தங்களுக்குள்ளே ஒரு கொண்டாட்டம் ஏற்பாடு செய்துகொண்டாலும் பலத்த விமரிசனங்களுக்கு உள்ளாகிறார்கள்.
இன்னமும் இஸ்ரேல் நாட்டின் பெண்கள் பலர் பருவமைடந்தபின், அவர்கள் பிறப்பு உறுப்புகளில் சில பாகங்கள் நீக்கப்பட்டு தைக்க படுவதை செய்கிறார்கள். இதனால் கலவியின் போது அதிக வலியும் வேதனையும் வரும் என்பதால் பிற ஆண்களிடையே உறவு கொள்ள துணியமாட்டார்கள் என்பதும் நல்ல குடும்பத்து பெண்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உறவு கொள்வார்கள் எனவும் நம்புகிறார்கள். அமெரிக்கா வந்தபின்னும் இந்த நடைமுறை பலரிடம் மாறவில்லை. மயக்க மருந்துகள் இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சையின் பின், சீழ்பிடித்தும் இரத்தபோக்கினாலும் இறக்கும் பெண்கள் அதிகம்.
ஆப்பிரிக்க நாட்டில் கணவன் இறந்த அன்றே அவன் மனைவியை கட்டாயப்படுத்தி ஊரில் இதற்காகவே இருக்கும் ஒருவருடன் உறவுகொண்டால்தான் அவள் கணவன் சொர்கத்திற்கு போவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கதோலிக்க மதத்திலும் இதுபோல பல மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. இப்போது கருச்சிதைவு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆதிக்கம் செலுத்துவது பரவலாக தெரிகிறது.
முன்பே உஷா எழுதியதுபோல இங்கே கலாச்சாரம் என்பது பெண்களைன் உடைகளே நிர்ணயிக்கின்றன அல்லது பெண்கள் அதை கட்டி காக்க வேண்டும் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆடைகள் மாறுவதால் ஆதிக்கம் போவதில்லை என்றாலும், எந்த ஆடை அணியவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் குறைந்த பட்ச உரிமையாவது வேண்டாமா? விரும்பி இருக்கும் போது நகைகளை அணிவது, அது இல்லாத குடும்பத்திலும் இந்த நகைகள் இருந்தால்தான் திருமணம் என்று விதிப்பதும், சில நகைகளை மங்களகரத்துடன் இணைத்து கட்டாயப்படுத்துவதும் வேறாக எனக்கு தோன்றுகிறது. காரடையான் நோன்புகளும் கர்வாசொத்துகளும் இருப்பது இதனால்தானே. கணவனோ அல்லது மனைவியோ நலமுடன் வாழ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதுவே சடங்காகி பெண்கள் செய்ய வேண்டிய ஒன்றாக ஏன் மாற வேண்டும்?
இந்து மதத்தில் கோவில்களில் மரியாதை வழங்குவது முதல், பேய் விரட்டுவது, மந்திரம் சொல்வது வரை, ஆராதனை முடிந்தவுடன் முதலில் ஆண்களுக்கு கைக்குழந்தையானாலும் உட்பட தீர்த்தம் வழங்கியபிறக்கே பெண்களுக்கு என்பதில் இருந்து இன்ன பல கட்டுப்பாடுகள் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனாலும் இததனை கட்டுபாடுகள் இருந்தாலும் இந்த மதங்களை வளர்ப்பதும் ஆராதிப்பதும் பெண்களே என்பது குறித்து முன்னமே எழுதி இருக்கிறேன்.
மனித நேயத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்வதே வேதனைக்குரிய விஷயம். இயல்பாகவே இருக்க வேண்டிய ஒன்றை இருக்க செய்வதற்கு கூட பேசவும் எண்ணவும் வேண்டுமென்றால் அது வேதனைக்குரிய விஷயம் தானே. புதிதாக கற்றுகொள்வது எளிதானது. ஆனால் கற்றுகொண்ட ஒன்றை மறப்பது கடினமானது.It is difficult to unlearn than to learn. இதில் கவலைபடகூடிய விஷயம் என்ன என்றால் சாதி பற்றிய எந்த தகவலும் கொடுக்க தேவையில்லா அமெரிக்காவிலும் கூட தங்கள் குழந்தைகளிடம் இந்த அடையாளங்களை திணிப்பதுதான். நாம் ஆயுதங்களை கீழே போடாத அருச்சுனர்களாக இருக்க ஆசைப்படுகிறோம்.காண்டீபத்தை கீழே போடாமலே பயமெதற்கு என்று கேட்பவர்களாகவே இருப்பதுதான் வேதனையான விஷயம்.