»
S
I
D
E
B
A
R
«
மண(ன) முறிவும் மற்றையவும் – 2
June 25th, 2007 by பத்மா அர்விந்த்

விவாகரத்துக்கான காரணங்களை அலசும் முன் திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்ப்போம். நம் ஊர் திருமணங்களைப் பற்றி முன்பே பல பதிவுகளாக எழுதிவிட்டபடியால், அமெரிக்க திருமணங்களைப் பற்றி ஒரு மேலோட்டம். லாஸ்வேகாஸ் திருமணங்கள், ஹாலிவுட் திருமணங்கள் இதில் சேர்த்தி இல்லை.

நம் ஊரில் மட்டும் இல்லை இங்கேயும் திருமணம் நிறைய திட்டமிட்டே பல எதிர்பார்ப்புகளோடு நிகழ்கிறது. வாழ்நாளில் சேமித்த உழைப்பு செலவிடப்பட்டும் மிக விமரிசையாக அரங்கேறுகிறது. பெண் வீட்டினரே பெரும்பாலான செலவைச் செய்கிறார்கள், தேனிலவுக்கான பயணம் உள்பட. திருமணத்திற்கு முதல் நாள் மாலை நடக்கும் ரிகர்சல் ஒத்திகைத் திருமணச் செலவை சில சமயம் பிள்ளை வீட்டார் ஏற்பதுண்டு. மற்றபடி மேசைகளில் வைக்கும் சின்ன சின்ன பரிசுப்பொருள் (நாம் வைத்துக்கொடுப்பது போல) முதல் மணமகனும் மணமகளும் திட்டமிட்டு நல்ல முறையில் நடக்க வேண்டுமே என்று கவலைப்பட்டு யார் மனமும் புண்படாமல் ஒரு மணமகள் தோழன், தோழியை தேர்ந்தெடுத்து அப்பாவின் இரண்டாம் மனைவியை அழைத்தால் அம்மா மனம் வருந்துவாரா என்றெல்லாம் கவலைப்பட்டு நடத்தி எந்த பயனும் இல்லாத, மிக மேலோட்டமான ரத்து செய்வார்களா? சற்றே சிந்தித்துப்பாருங்கள்.இந்தக் காரணங்கள் எப்படி வருகின்றன என்பதை விவாகரத்து வழக்குகளின் அடிப்படையைப் பார்க்கும் போது காணலாம்.

என் அலுவலக சக ஊழியர் பெண் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்த விழாவிற்கே நிறைய செலவாகிவிட்ட படியால், இப்போது திருமணத்திற்காக பொருள் சேர்க்க பகுதி நேர வேலையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆன மகிழ்ச்சி, மணமகன் நல்லவனாக இருக்க வேண்டுமமென்ற கவலை,மணமகனை பற்றி தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரிப்பது என்ற எந்த வகையிலும் நம் ஊர் தந்தைக்கு மாற்றானவர் இல்லை. இப்போதெல்லாம் பெண்களும் வேலைக்கு போய் பொருள் ஈட்டுவதால், தந்தையின் செலவிற்கு தானும் கொடுப்பதும், ஆண்களும் தேனிலவு போன்ற செல்வை பகிர்ந்து கொள்வதுமாய் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தனக்கு வாடகை கார் ஏற்பாடு செய்யவில்லை, பார்ட்டி ஃவெவர் எனப்படும் பரிசு சரியாக இல்லை (நான் கொடுத்த பரிசு 100$, அவர் திருப்பி தந்தது எங்கோ ஒரு டாலர் கடையில் இருந்து) என்பது போன்ற சண்டைகளும் உண்டு. முன்பெல்லாம் இங்கேயும் விவாகரத்துகள் அவ்வளாவாய் இல்லை என்பதை கீழ்க்காணும் ஒரு புள்ளியியல் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
Year Divorces per 1,000 population Year Divorces per 1000 population
1950 ……….. 2.6 1983 ……….. 5.0
1955 ……….. 2.3 1984 ……….. 5.0
1957 ……….. 2.2 1985 ……….. 5.0
1960 ……….. 2.2 1986 ……….. 4.9
1965 ……….. 2.5 1987 ……….. 4.8
1970 ……….. 3.5 1988 ……….. 4.8
1971 ……….. 3.7 1989 ……….. 4.7
1972 ……….. 4.0 1990 ……….. 4.7
1973 ……….. 4.3 1991 ……….. 4.7
1974 ……….. 4.6 1992 ……….. 4.8
1975 ……….. 4.8 1993 ……….. 4.6
1976 ……….. 5.0 1994 ……….. 4.6
1977 ……….. 5.0 1995 ……….. 4.4
1978 ……….. 5.1 1996 ……….. 4.3
1979 ……….. 5.3 1997 ……….. 4.3
1980 ……….. 5.2 1998 ………. 4.2
1981 ……….. 5.3 1999 ………. 4.1
1982 ……….. 5.1 2000 ………. 4.2
1983 ……….. 5.0 2001 ………. 4.0
சின்ன சின்ன கிராமங்களில் இன்னமும் எத்தனை மனசங்கடங்கள் இருந்தாலும், பாவம், சுவர்க்கம் கிடைக்காது என்றும், குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டுமமென்பதாலும் பயந்து சேர்ந்து வாழ்பவர்கள் உண்டு. ஒரு அரசாங்க வழக்கறிஞர் தன் துணைவியிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்வார். வாயில் துப்பாக்கியை வைத்து கொன்றுவிடுவேன் என்றெல்லாம் பயமுறுத்துவது வழக்கம். சாப்பாடு ஆறிவிட்டால்கூட எலும்புகள் உடையுமாறு அடிப்பதும் உண்டு. ஆனாலும் அந்த பென் கணவனை எதிர்த்து புகாரிடவே முடியவில்லை. முதல்காரணம், எல்லா காவலருக்கும் கணவனை தெரியும், இரண்டாவதாக நல்ல பதவியில் உள்ள கணவனின் வார்த்தைகளுக்கு முன் அவளை நம்ப யாரும் தயாரில்லை, மூன்றாவதாக மற்ற நன்பர்கள் எல்லாரிடமும் மிகவும் நல்ல மனிதன், அன்பானவன் என்று கணவன் பெயரெடுத்திருந்ததும், நல்ல அதிகாரம் உள்ள பதவியில் இருந்ததும், பொது இடங்களில் மிகவும் அன்பாக நடத்தியதும் காரணம், கடைசியாக பல வருடங்களாக கணவன் சொன்ன குற்ற சாட்டுகளை நம்பி, கடைசியில் அந்த பெண்னே தன்னை பற்றி குறைவாக மதிப்பிட்டது. ஒருநாள் எதேச்சையாக வாய்க்குள் வைத்து மிரட்டிய துப்பாக்கி வெடித்து(தவறுதலாக ட்ரிகரை மிகவும் அதிகமாக அழுத்தி பயமுருத்தியது போல செய்யும் போது) இறந்து போனபின் குழந்தைகள் சொன்ன சம்பங்களை பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள். அரசாங்க வழக்கறிஞர்கள், காவலர்கள் இவர்கள் மேல் வழக்கு பதிவதென்பது மிகவும் கடினம்.பொய் வழக்குகள் நிறைய வரும், சாலையில் போகும் போது மற்ற காவலரால் வேண்டும் என்றே சின்ன குற்றங்கள் பதிவாக்கப்படும், ட்ரங்கை திறக்க சொல்லி போதை பொருள் போட்டு வழக்கு பதியப்படும் அபாயங்கள் நிறைய உண்டு.

விவாகரத்தில் நிறைய வகைகள் உண்டு. At fault, no fault என்ற இரண்டு பெரிய பிரிவுகள் உண்டு. இரண்டு பேரும் மனம் ஒன்றி விவாகரத்து கோரினாலும் நியுஜெர்ஸியில் 18 மாதங்கள் பிரிந்து இருக்க வேண்டும். இந்த வகைகளைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில்.


4 Responses  
  • இலவசக்கொத்தனார் writes:
    June 25th, 2007 at 1:03 pm

    //ட்ரங்கை திறக்க சொல்லி போதை பொருள் போட்டு வழக்கு பதியப்படும் அபாயங்கள் நிறைய உண்டு.//

    அடடா, இதெல்லாம் இங்கேயும் உண்டா? வீட்டுக்கு வீடு வாசப்படி.

    அந்த் புள்ளி விபரம் கொஞ்சம் ஆச்சரியம்தான். 70களிலும் 80களிலும் உச்சக்கட்டத்தில் இருந்த டிவோர்ஸ் இப்பொழுது சற்றே குறைந்த நிலையில் இருக்கிறதே, என்ன காரணம்?

    இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நிலமை என்ன? அதற்குண்டான புள்ளி விபரங்கள் உண்டா?

  • பத்மா அர்விந்த் writes:
    June 25th, 2007 at 1:15 pm

    இப்போது விவாகரத்து குறைய முக்கிய காரணம், குழந்தைகள்தான். அமெரிக்காவில் 20 முதல் 24 வயதுக்குள் திருமணம் செய்து கொள்பவர்கள் விவாகரத்து சதவிகிதம் மிக அதிகம். அதுவே 30 முதல் 40 க்குள் செய்துகொள்ளும் திருமணம் நிலைத்து நிற்கிறது. அதிகமான தொழில் முன்னேற்ற அக்கறை தாமதமாக மன முதிர்ச்சி அடைந்த பின் செய்துகொள்ளும் திருமணங்கள் மேலும் மன நல திருமண ஆலோசகர்கள், பணியிடங்கள் அழுத்தம் ஒருவர் இன்னொருவரை விரும்ப காரணமாவதாக சொல்கிறார்கள்.
    இந்தியாவில்தான் உலகிலேயே விவாகரத்து குறைந்த அளவில் இருப்பதாகவும் அதற்கு சமுதாயத்தில் இன்னமும் விவாகரத்தை பெற்றவர்கள், அவர் குழந்தைகளை பார்க்கும் அளவீடு, மற்றும் விவாகரத்தே இல்லாமல் “தள்ளி” வைப்பது, சட்டம் மீறி பிரிந்து இருப்பது, கோபித்துக்கொண்டு அம்மா வீட்டில் நிரந்தரமாய் இருப்பது போன்ற காரணங்கள் விவாகரத்தை அவசியமாக்குவதில்லை. மேலும் சிலர் விவாகரத்து பெறாமலே பல உறவுகள் கொண்டு வாழ்வதும் சட்டத்திற்கு தெரிந்தே இருந்தாலும் ஒருவர் குரை சொல்லாமல் தண்டனை இல்லை.
    இந்த புள்ளி விவரங்கள் அமெரிக்க சென்சஸ், மற்றும் ஐநா சமை புள்ளிவிவரத்தில் இருந்து பெறப்பட்டது. இந்தியா மற்றும் ஆசிய நாடுகள் , அமெரிக்காவில் திருமண வயதும் விவாகரத்தும் பற்றீய விவரங்களை வரும் பதிவில் தருகிரேன்.

  • அல்வாசிட்டி.விஜய் writes:
    July 2nd, 2007 at 9:47 am

    நல்ல தொடர். அறிந்துக்கொள்ள பயனுள்ள தொடர்.,

  • மங்கை writes:
    July 3rd, 2007 at 9:45 am

    http://manggai.blogspot.com/2007/07/blog-post_03.html

    போஸ்ட் போட்டுட்டேன் பத்மா…நன்றி


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions