»
S
I
D
E
B
A
R
«
புனரபி ஜனனம் புனரபி மரணம்
January 14th, 2008 by பத்மா அர்விந்த்

இயல்பாய் இரு. கண்ணோரம் துளிர்க்கும் நீரையும், மனதில் வரும் பயத்தையும் யாருக்காக மறைக்க வேண்டும்? நீயாய் இரு. ஆண்கள் அழக்கூடாதென்று சொல்லி வளர்க்கப்பட்டதன் விளைவு இது. இந்த பயமும் உணர்வும் சரியானதே. உன் பயம் என் திடத்தை போகும் என்று எண்ணிக்கொண்டு தடுமாறாதே. அடிக்கடி விழித்துக்கொண்டு தூக்கம் தொலைத்து உன அறைக்கு வரும் போதெல்லாம் நீயும் விழித்துக்கொண்டே இருக்கிறாய். இரவு நெடுநேரம் கழித்து உன் அறைக்கு வந்து உன் சுவாசத்தை கேட்கிறேன். ஆழ்ந்த உன் சுவாசத்தை கூட எங்களால் இப்போது கேட்க முடிகிறது. காலையில் நீ விழிக்க சற்றே தாமதமானால் கூட பதற்றம் தொற்றிக்கொள்கிறது. mom, is Dad alright என்று பதறும் பிள்ளைக்கு எத்தனை முறை சொன்னாலும் அதையே செய்கிறான். one of us have to be in great health, or family will become dysfunctional என்பாய். ஒருவராவது எளிய வேலை செய்யவேண்டும் என்பாய். ஷோலேயில் வரும் காசைப் போல எல்லா நேரமும் கடின வேலைகள், சங்கடங்கள் உன் தோள்மீதே. அந்த சுகத்தில் இதுவரை நான் என் மனம் போல எல்லாம் செய்திருக்கிறேன். ஒரு 16 வருடம் முன் இன்னொருவர் மீது இத்தனைதூரம் சார்ந்திருப்பேன் என்பது என்னால் நம்ப முடியாததாகவே இருந்தது. இப்போதுதான் நான் என் உன் மீது எத்தனைதூரம் சார்ந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. என் சக்தியும் நீ என்பது போல என் பலவீனமும் நீயே. கடந்த இரண்டு வருடத்தில் நிறைய விஷயங்களில் நாம் கவனம் செலுத்தாமல் போயிருக்கிறோம். செய்ய வேண்டிய செயல்களை ஒத்தி போட்டிருக்கிறோம். சின்ன சின்ன விஷயத்தில் கவனம் சிதறிப்போய் இருக்கிறது. செய்கிறேன் என்று சொன்னததை எல்லாம் மறந்து போய் இருக்கிறேன். பொதுவாக செய்ய வேண்டியவற்றை கூறித்துக்கொள்ளும் பழக்கம் உண்டு. இப்போதெல்லாம் அந்த வரிசையில் உன் பெயர் மட்டுமே இருக்கிறது. நினைவெல்லாம் உனக்காக, வருனுக்காக என்று நிரம்பி இருக்க மற்றது எப்படி நினவில் இருக்க முடியும். இழந்தது சில ஆனால் குறை ஒன்றும் இல்லை. காற்றும் புயலும் தடுமாற்ற வந்தாலும், படகு அசையாமல் பயணித்துக்கொண்டிருந்ததற்கு நம் அடித்தளம் அசையாமல் இருந்ததும் ஒரு காரணம். உன் போல சுமப்பதை உணர்த்தாமல், சுமக்க முடியுமா என்பது நான் அறியேன். கர்வாசொத்திலும், காரடையான் நோன்பிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் மனநலன் சார்ந்த மூளையின் எதிர்ப்பு சக்தி திறனில் நம்பிக்கை உண்டு. உடல் சக்தி வேண்டுமானாலும் செல்லரிக்கலாம். மனதின் சக்திக்கு ஏது இறப்பு? நினைவிருக்கிறதா, நாம் பார்த்த ஆனந்த் திரைப்படத்தில் ராஜேஷ்கன்னா துறவியிடம் கேட்டுக்கொள்வான், என் மனதுக்கு சக்தி கொடு, ஆசிர்வாதம் என் மனதிற்கு தா உடலுக்குத்தானே இறப்பு என்று.


3 Responses  
  • Ag writes:
    January 14th, 2008 at 9:55 am

    Padma
    What happened?. Be strong, I know you will be. Keeping you in prayers.

    ..Ag

  • Manian writes:
    January 15th, 2008 at 12:30 am

    மனதின் சக்தி அளவிடமுடியாதது. மனதை வலிமைப்படுத்தவே ஆன்மீகம் வழிகோலுகிறது. வெல்வோம் என்ற மனவைராக்கியம் முன் மரணமும் சரணடையும்.

    உங்கள் மனம் தளர்ந்துள்ள நிலையில் மனவலிமை கொடு என நான் வணங்கும் தெய்வத்தை வேண்டுகிறேன்.கூட்டு பிரார்த்தனைகளுக்கும் சக்தி உண்டு என நான் நம்புகிறேன்.

  • Balaji writes:
    January 15th, 2008 at 9:43 am

    :)


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions