»
S
I
D
E
B
A
R
«
வாழ்த்துக்கள் ஒபாமா
January 20th, 2009 by பத்மா அர்விந்த்

இப்போதுதான் உங்களுடைய பதவி ஏற்பு உரையை கேட்டேன். அமெரிக்காவின் பிரச்சினைகளை தொட்டு சென்றதும், அவை சரியாக இன்னும் சில காலம் ஆகும் என்ற நிதர்சனத்தையும் கூறினீர்கள். மக்களிடையே ஏற்றத்தாழ்வென்பது இல்லை என்றும், அடிமையாக இருந்த ஒர் ஈனத்தை சேர்ந்தவர் நாடாள வந்ததன் இயல்பையும் நாட்டின் பெருமையாக சொன்னதையும் கேட்டு மனம் நிறைந்திருக்கிறது. உணவகத்திலே கூட நின்று பேச அதிகாரம் இல்லாத பரம்பரையில் இருந்து இன்று நாடாள உறுதி மொழி எடுத்துக்கொள்கிற வரை வந்ததை நினைவு கூறினீர்கள். வழிகிற கண்ணோரோடு குழுமி இருந்து ஆர்ப்பரிக்கும் மக்களை கண்டு நம்மையும் அறியாமலேயே சிலிர்க்கிறது.

மக்கள் என்னிடம் மின்மடலில் தொடர்புகொள்ளலாம் என்று நீங்கள் அளித்த செவ்வி ஒன்று கூறுகிறது. உங்கள் சிரிப்பில் உண்மை இருப்பதாக உடல் மொழியாளர்கள் எழுதுகிறார்கள். வெள்ளை மாளிகையில் கூடைப்பந்து அரங்கு நிர்வகிக்கப்படுகிறது. ஓட்டமும் Golfமட்டுமே இருந்த வெள்ளை மாளிகை கூடைப்பந்து விளையாட்டிற்கு தயாராகிறது.

பிரச்சினைகளை தீர்க்க உங்களிடம் மந்திரக்கோல் இல்லை என்பது தெரியும். ஆனால் எந்த ஒரு சிறு நாட்டிலும் வாழும் மக்கள் உரிமை இல்லாமல் வாழக்கூடாது என்றும் அமெரிக்க ஒரு சிறந்த நண்பனாக விளங்கும் என்று சொன்னதை நிறைவேற்றுங்கள். சின்னஞ்சிறு நாடாக இருப்பினும் மனித உரிமையை மதிக்க அமெரிக்க உதவி செய்யும் என்று சொன்னதை செயலில் காட்டுங்கள். ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களிடம் நடக்கிற அநீதிகளை கொஞ்சம் கவனியுங்கள். அங்கே அமெரிக்காவிற்கு தேவையான எண்னெய் வளம் இல்லை என்பதால் முக்கியத்துவத்தை குறைக்காதீர்கள். உங்களுக்கான வேண்டுகோள் வந்து கொண்டிருக்கிறது. போக வேண்டிய தூரம் அதிகம், கவனிக்க வேண்டிய வேலைகளும் அதிகம். தாமதமானாலும் நிராகரிக்காதீர்கள்.

மகத்தான சாதனைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.


5 Responses  
  • Palaniswamy K Annur writes:
    January 20th, 2009 at 1:44 pm

    “ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களிடம் நடக்கிற அநீதிகளை கொஞ்சம் கவனியுங்கள். அங்கே அமெரிக்காவிற்கு தேவையான எண்னெய் வளம் இல்லை என்பதால் முக்கியத்துவத்தை குறைக்காதீர்கள். உங்களுக்கான வேண்டுகோள் வந்து கொண்டிருக்கிறது. போக வேண்டிய தூரம் அதிகம், கவனிக்க வேண்டிய வேலைகளும் அதிகம். தாமதமானாலும் நிராகரிக்காதீர்கள்

    சின்னஞ்சிறு நாடாக இருப்பினும் மனித உரிமையை மதிக்க அமெரிக்க உதவி செய்யும் என்று சொன்னதை செயலில் காட்டுங்கள்.”

  • தீவு writes:
    January 20th, 2009 at 3:11 pm

    நன்றி

    ஒபாமா கவனிக்கிறாரோ இல்லையோ உங்களைப்போன்ற தமிழக உறவுகள் கவனித்துக்கொண்டிருப்பது ஆறுதலளிக்கிறது.

  • துளசி கோபால் writes:
    January 20th, 2009 at 6:04 pm

    எங்கள் வாழ்த்துக்களையும் சொல்லிருங்க பத்மா.

    நல்லதே நடக்கும் என்று நம்புகின்றோம்.

  • இலவசக்கொத்தனார் writes:
    January 20th, 2009 at 6:18 pm

    கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம். இது வரை செய்தது முன்பை விட வித்தியாசம் இருக்கும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தவில்லை. நல்லது நடந்தால் சரி என்ற மனப்பான்மையில்தான் இருக்கிறேன். பார்க்கலாம்.

  • பத்மா அர்விந்த் writes:
    January 21st, 2009 at 9:55 am

    கவனிப்பதாலேயா துயரம் அதிகமாகிறது. இந்த வார விகடனில் வந்த கட்டுரையைப் படிக்க கூட இயலவில்லை.
    துளசி: நேராவே சொல்லிடலாம். விடாப்பிடியா பிளாக்பெரி வச்சிருப்பேன், யார்வேணா மின்மடல் அனுப்பலாம்னு சொல்லி இருக்கார். உளவுத்துறை அனுமதிக்குமான்னு தெரியவில்லை. பார்க்கலாம்.

    கொத்தனாரே:
    ஒபாமாவால் எதையும் மாறூபட்டு செய்ய முடியாது. அதில் நிறைய அரசியல் சிக்கல்கள் உண்டு. நிறைய கிளிண்டன் ஆதரவாளர்கள், அவரால் பயிற்றுவிக்க பட்டவர்களே மந்திரி சபையில். பொறுத்திருந்துதான் பார்ப்போமே. எடிசன் நடக்கிற் சண்டை நமக்கெல்லாம் தெரியும். அதுவே நாடளவில் ஆனாலும் ஆச்சரியம் இல்லை.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions